பெரும்பாலும் நவம்பர் முதல் ஜனவரி வரையிலான காலமே ஐயப்பனைத் தரிசிக்க உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஆனால் அந்தக் காலங்கüல் பக்தர்கüன் கூட்டம் மிக அதிகமாக இருப்பதால் ஐயப்பனை நமது மனதுக்கு நெருக்கமாகத் தரிசிக்க முடியாது என்பதாலும், தங்களது ஆன்மிகப் பயணத்தில் கூடவே குழந்தைகளையும் அழைத்துச் செல்ல வேண்டி இருப்பதாலும் ஏப்ரல், மே மாதங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் ஆண்டுதோறும் தவறாமல் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலையிட்டு, விரதம் அனுஷ்டித்து ஐயப்பனைத் தரிசித்து வரும் சென்னை பெரம்பூர் பகுதியைச் சார்ந்த அருள்மொழி மற்றும் தமிழ் உள்üட்ட நண்பர்கள்.
இந்த முறை அந்த சபரிமலை ஆன்மிகப் பயணத்தில் நமக்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது. பல ஆண்டுகளாக ஐயப்பனைத் தரிசிக்க வேண்டும் என மனதில் நினைத்தாலும் இந்த முறைதான் ஐயப்பன் அருளால் அது நடந்தேறியது.
நாம் முதல்முறை (கன்னிசாமி) என்பதால் இருப்பதிலேயே மிகக்குறைந்த நாட்களான 11 நாட்களை மாலையணிய தேர்ந்தெடுத்திருந்தோம், நாம் செய்வது சரியா என மனதுக்குள் ஒரு வித குழப்பமும், அச்சமும் இருந்தது. ஆனாலும் ஐயப்பன் மீதான பக்தி மனதில் இருந்தால் போதும், எல்லாம் சரியாக நடக்கும் என நம்பிக்கை தந்தார்கள் நண்பர்கள். குழுவிலுள்ள மற்ற நண்பர்கள் சரியான முறையில் விரதம் அனுஷ்டித்தனர்.
விரத நாட்கள் முடிந்தபிறகு ஏப்ரல் 3-4-2025-ஆம் தேதி சபரிமலை கிளம்ப முடிவு செய்து, பெரம்பூர் ஐயப்பன் கோவிலில் சாமிகளுக்கு இருமுடி கட்டப்பட்டது. நம்மோடு கன்னிசாமிகளாக குழந்தைகள் ஜஸ்வந்த், ஹேமித்ரா மற்றும் ராஜேஷ், அரவிந்த்ராஜ், பூபேஷ், கௌசிக், திலிப் ஆகியோர் பயணித்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/iyappan_6.jpg)
இருமுடி கட்டிக்கொண்ட சாமிகள் அனைவரும் குடும்பத் தோடு பெரம்பூர் ஐயப்பனைத் தரிசித்தோம். பின்னர் குடும்பத் தினர் விடைகொடுக்க அன்று பகலில் திருவனந்தபுரம் எக்ஸ் பிரஸில் பயணிக்க ஆரம்பித்தோம். ரயில் சரியாக 3-20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட ஆரம்பித்தது. நாம் பயணித்த அந்த தருணத்தில் பெரும்பாலும் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்கு பயணம் செய்தவர்கள்தான் ரயிலில் அதிகமிருந்த னர். நம்மோடு குழந்தைகளும் பயணித்ததால் அந்தப் பயணம் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.
சரியாய் முதல் நாள் மாலை 3-20-க்குப் புறப்பட்ட சாமிகள் அனைவரும் மறுநாள் அதிகாலை 4-40 மணிக்கு கேரள மாநிலம் ஆலப்புழா செங்கன் னூரை அடைந்தோம். அங்கிருந்து வேன் மூலமாக சபரிமலையை அடைய திட்ட மிட்டிருந்தோம்.
அதிகாலை செங்கன்னூரை அடைந்த நாம் அங்கேயே குüத்து முடித்தபிறகு செங்கன் னூரில் வீற்றிருந்த புகழ்பெற்ற மகாதேவர் கோவிலைத் தரிசித் தோம். அது ஒரு புகழ்பெற்ற சிவாலயம் ஆகும். இங்குள்ள பகவதி அம்மனும் பிரசித்தி பெற்றவர் என்பதால் பகவதி கோவிலாகவும் கருதப்படுகிறது. அதிகாலையில் பக்தி சிரத்தை யுடன் அந்தக் கோவிலை வலம் வந்தோம்.
அடுத்ததாக பந்தனம் திட்டா மாவட்டத்திலுள்ள ஆறன்முளா பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தை அடைந் தோம். இந்தத் திருக்கோவில் 108 வைணவத் திருத்தலங்கüல் ஒன்றான பிரசித்தி பெற்ற ஆலயமாகும். பார்த்தசாரதிப் பெருமாளை வணங்கியபிறகு அடுத்ததாக நாம் பந்தளம் அரண் மனைக்குச் சென்றோம். ஐயப் பன் பிறந்து வளர்ந்த இட மாகச் சொல்லப்படும் இந்த அரண்மனையில்தான் ஐயப்ப னுக்கு அணிவிக்கப்படும் திருவா பரணம் வைக்கப்பட்டிருக்கிறது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த அரண்மனை இயங்கி வருகிறது. பந்தளத்தில் ஐயப்பன் பிறந்த இடத்தைத் தரிசித்து விட்டு நேராக சபரிமலை சென்றோம். போகும் வழி யிலேயே ஓடிக்கொண்டிருந்த ஆறு ஒன்றில் ஆனந்தத்தோடு குüயல் போட்டோம். அந்த ஆறு பம்பை நதியில் சென்று கலக்கும் என்ற தகவலையும் நண்பர்கள் சொன்னார்கள். குüயலை முடித்து விட்டு வேனில் மீண்டும் பயணிக்க ஆரம்பித் தோம். கேரளாவின் இயற்கைச் சூழலை பெரும் மகிழ்வோடு இருபுறமும் ரசித்து வந்தோம்.
நம்மை பலத்த மழையுடன் வரவேற்றது சபரிமலையின் பம்பை நகர். பகல் உணவை அந்த பம்பை நகரில்தான் முடித்தோம். கடும் மழைக்கு இடையே அங்கே தந்த சூடான கேரள ஸ்டைல் உணவு மிகுந்த சுவையானதாகவே இருந்தது.
உணவு முடித்தபிறகு மேலும் சில நண்பர் கüன் வரவுக்காகக் காத்திருந்த நாம் அவர் கüன் வருகைக்குப் பிறகு சபரிமலைக்கு செல்ல ஆயத்தமானோம். நண்பர்கள் வருவதற் கும் மழை ஓய்வதற்கும் நேரம் சரியாக இருந்தது. பகல் நேரம் முடிவுக்கு வந்து, மாலை யும் தலைகாட்ட மெல்ல நடக்க ஆரம்பித் தோம். முதலில் கன்னிமூலை கணபதியை வணங்கி விட்டு படியேற ஆரம்பித்தோம். மழை பெய்திருந்ததால் கோடைகாலமான ஏப்ரல் மாதமும் நல்ல குüர்ச்சியையே தந்தது.
சபரிமலை ஐயப்பன் கோவில் யாத்திரை என்பது பக்தி, ஒழுக்கம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் அனுபவமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. தலையில் இருமுடியை வைத்துக் கொண்டு நாம் படியேறினாலும் அந்த இருமுடி தலையில் இருப்பது போன்ற எண்ணத்தை ஐயப்பன் தருவதில்லை. சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷம் மட்டுமே மனதில் ஒலிக்கிறது. இந்தப் பயணத்தில் குழந்தைகளும், இளைஞர் களும், நடுத்தர வயதை உடையவர்களும் பயணித்ததால் கொஞ்சம் முன் பின்னாகவே பயணித்தோம்.
சரங்குத்தியை அடைந்த நாம் கன்னிசாமி என்பதால் வில் வடிவிலான குச்சியைக் குத்தி வரச் சொன்னார்கள். நம்மோடு மற்ற கன்னிசாமிகளும் அதை பக்தியுடன் செய்து முடித்தனர்.
சரங்குத்தி மலையில் அந்த வழிபாட்டை முடித்தபிறகு மீண்டும் நடையைத் தொடர்ந் தோம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/iyappan1_1.jpg)
சரங்குத்தி மலை வரை ஏற்றமாக உள்ள மலைப் பகுதி அதன்பிறகு நம்மை சற்று சமதளத்தில் பயணிக்க வைக்கிறது.
இன்னும் சற்று நேரத்தில் ஐயப்பனைத் தரிசிக்கப் போகிறோம் என்ற ஆவல் மனதுக் குள் உற்சாகப்படுத்தியது.
நடையைத் தொடர்ந்தோம். வழியெல்லாம் பக்தர்கள் கூட்டம். நடக்க முடியாத பக்தர்களை டோலிகüல் துக்கிக் கொண்டு வந்தார்கள். டோலி, டோலி என்ற சத்தம் அவ்வப் போது கேட்டுக்கொண்டே இருந்தது.
நாங்கள் ஒருவர்பின் ஒருவராக அனைவரும் சபரிமலை ஐயப்பன் கோவிலை அடைந்து விட்டோம். நடந்து வந்த களைப்பு தீர தேவஸ்தான பணியாளர்கள் பிஸ்கெட் கொடுத்து எங்களை வரவேற்றார்கள். ஐயப்பனை தரிசிக்க எங்களுக்கு முன்னர் வந்தவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள்.
நாங்களும் எங்களுக்கான வரிசையில் காத்திருக்க ஆரம்பித்தோம். அப்போது படி பூஜை நடந்து கொண்டிருந்தது. சுமார் அரை மணி நேரம் நேரலையில் அந்த படிபூஜையை தரிசித்தோம்.
மாலையணிந்து, விரதமிருந்து, இரு முடி கட்டி ஐந்தாறு கிலோ மீட்டர்கள் பயணம் செய்வது எல்லாம் அந்த சபரி நாதனைக் காணத்தான். பதினெட்டு படியேறி அவனைத் தரிசிக்கத்தான் என்கிற மகிழ்வோடு, நாம் பதினைட்டு படியை அடையும் நேரமும் வந்தே விட்டது. ஐயப்பனைக் காண்பதற்கு முன் ஒரு சிதறு தேங்காயை உடைத்தோம்.
பதினெட்டு படியை ஏறுவதற்கான வழியை இரண்டாகப் பிரித்திருந்தார்கள்.
அதில் ஒரு வழியில் ஏற ஆரம்பித்து, படியின் உச்சியை அடைந்தபோது பாதுகாப்புக்கு நின்ற காவலர் கைகளைப் பிடித்து இழுத்து மேலேற்றினார்.
ஐயப்பனை தரிசிக்க சரணம் ஐயப்பா என்ற கோஷத்துடன் அங்கும் வரிசை யில் காத்திருந்தார்கள். சிறிது, சிறிதாக வரிசையில் முன்னேறி நாமும் ஐயப்ப னைத் தரிசித்துவிட்டோம். அதுவரை என்னென்னவோ வேண்டுதல்களை மனதில் நினைத்து வந்தாலும் ஐயப்பனின் முகம் பார்த்த அந்த நொடி அத்தனையும் மறந்து போனது. சில வினாடிகளே தரிசனம். அந்த வினாடிகüல் அவன் முகம் பார்த்தால் போதும். வேறெதுவும் வேண்டாம் என்பதுவே பக்தர்கüன் எண்ணமாக இருக்கிறது.
குழுவாக வந்திருந்த அத்தனை பேரும் தரிசித்து முடித்தபிறகு தங்குவதற்கான அறையைத் தேட ஆரம்பித்தோம், முதலில் மறைந்த நடிகர் நம்பியார் தங்கும் அறைதான் நமக்கு புக் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த அறையைக் கண்டுபிடிப்பதோ, அவர்களுக்கு புரிய வைப்பதோ பெரும் சிரமமாகிப் போனது.
நேரமாகிக் கொண்டிருந்ததால் வேறு அறை தேட ஆரம்பித்தோம். நல்வாய்ப்பாக பி.எஸ்.என்.எல் விடுதி ஒன்று தங்குவதற்குக் கிடைத்தது. இரவு உணவை முடித்தபிறகு ஒன்றும் தெரியாத கன்னிசாமிகள் ஓய்வைத் தொடர, பல்லாண்டுகளாக ஐயப்ப னைத் தொடர்பவர்கள் அங்கே அனைவரும் கொண்டு வந்திருந்த இருமுடியைப் பிரித்து அரிசி மற்றும் நெய்த் தேங்காயை பிரித்துக் கொண்டிருந்தார்கள்.
அனைத்து வேலைகளும் முடிவதற்கு இரவு மணி 12 ஆனது.
அவர்களும் சிறிது நேரம் கண் அயர்ந்தார்கள். அனைவரும் அதிகாலை ஐந்து மணிக்கே குüத்து கிளம்பவேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி அதிகாலை அனைவரும் எழுந்து குüத்துவிட்டு மறுபடியும் ஐயப்பனைத் தரிசிக்கக் கிளம்பினோம்.
அதிகாலை ஐயப்பனுக்கு நடைபெறும் சிறப்பு நெய் அபிஷேகம் புக் செய்யப்பட்டிருந்தது. அந்த நெய் அபிஷேகத்தில் ஐயப்பனை அருகில் இருந்து தரிசிக்கும் வாய்ப்பும் நமக்குக் கிட்டியது. நம்மை அழைத்துச் சென்ற நண்பர்கள் நாம் கன்னிசாமி என்பதால் ஐயப்பனை அருகில் இருந்து தரிசிக்கும் அந்த வாய்ப்பை நமக்குத் தந்திருந்தார்கள். ஐயப்பனைத் தரிசித்துவிட்ட பெரும் மகிழ்ச்சியில் அனைவரும் ரயிலில் சென்னை திரும்பினோம். அவரவர் இல்லம் திரும்பி, மீண்டும் ஐயப்பனுக்கு ஒரு பூஜை செய்தபிறகு மாலையைக் கழற்றி ஐயப்பனிடம் இருந்து விடை பெற்றோம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-05/iyappan-t.jpg)